ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிற வாரிய திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவி தொகைக்கு ஈடாக ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 2021-2022ம் ஆண்டு முத்திரைத்தாள் மற்றும் பத்திரபதிவு மானியக்கோரிக்கை அறிவிப்பின் போது, பதிவுத்துறையை சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆவண எழுத்தர் நல நிதியத்தை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். நலநிதிய உறுப்பினர்களாக இருந்து ஓய்வு பெறும் ஆவண எழுத்தர்களுக்கு பிற நல வாரியங்களில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை போலவே ஓய்வூதியம், விபத்தில் மரணமடையும் நலநிதி உறுப்பினர் குடும்பத்திற்கு நிதியுதவி, ஆவண எழுத்தர் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்தார். இதன் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள பிற வாரிய திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் உதவி தொகைக்கு ஈடாக ஆவண எழுத்தர் நல நிதியத்தின் உதவி தொகைகளும் மறு கணக்கீட்டு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விபத்தில் மரணம், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சமும், மற்ற உடல் ஊனங்களுக்கு ரூ.20,000, இயற்கை மரணம் ரூ.20,000, திருமண உதவி தொகை ரூ.8000(ஆண்), பெண் ரூ.10,000. மகப்பேறு கால உதவித்தொகை ரூ.6000 உதவி தொகையும், பள்ளி இறுதி(எஸ்எஸ்எல்சி) படிப்பு உதவி தொகை ரூ.1000, பள்ளி இறுதி(எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சி ரூ.1000, மேல்நிலை படிப்பு, மேல்நிலை தேர்ச்சிக்கு ரூ.1500, தொழிற்பயிற்சி(ஐடிஐ), பட்டயப்படிப்பு(டிப்ளமோ) ரூ.2000(விடுதி அல்லாத மாணவர்களுக்கு), விடுதி மாணவர்களுக்கு ரூ.2500. பட்டப்படிப்பு ரூ.3000, விடுதி மாணவர்களுக்கு ரூ.3500, முதுகலை, தொழிற்கல்வி ரூ.10,000, இறுதி சடங்கு நிதி உதவி தொகை ரூ.5000, ஓய்வூதிய உதவி தொகை ரூ.1500, மூக்கு கண்ணாடி உதவி தொகை ரூ.1500 உதவி தொகை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்