ஆவண எழுத்தர்கள் நலனுக்கான நலநிதியம்: சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2021-22ம் ஆண்டுக்கான வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்படுகிறது. ஆவண எழுத்தர்களின் நலனுக்காக, நிரந்தர ஊனம் அல்லது பகுதி ஊனம், விபத்து கால மரணம் அல்லது இயற்கை மரணம், திருமணம், மகப்பேறு, மேலும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் திருமணம் மற்றும் கல்வி, ஓய்வூதிய பலன், நிதியுதவி ஆகியவற்றை வழங்குவதற்காக நலநிதியத்தை உருவாக்குவதற்காக ஆணை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை