ஆவணி பிரமோற்சவ விழா தேரோட்டம்

பழநி, செப். 4: பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் வருடந்தோறும் ஆவணி பிரமோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

தேரோட்டத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக அகோபில வரதராஜ பெருமாளுக்கு மலர்களாலும், அணிகலன்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு தேரேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து 7.45 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக அகோபில வரதராஜ பெருமாள் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

ஏராளமான மக்கள் வழிநெடுகிலும் தேங்காய், பழம் படைத்து வழிபாடு செய்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர், பேரூராட்சித்தலைவர் ராஜராஜேஸ்வரி சுப்புராமன், திமுக பேரூர் செயலாளர் சோ.காளிமுத்து மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து நாளை (செப்.5) நடைபெறும் விடையாற்றி உற்சவத்துடன் இந்த விழா நிறைவடைகிறது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு