ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 5.66 கோடி பறிமுதல்

சென்னை: வேளச்சேரி தொகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் மூர்த்தி தலைமையில், நேற்று மாலை அடையாறு இந்திரா நகர் இரண்டாவது அவென்யூ சாலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அச்சோதனையில், காரில் பெட்டிகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் திறந்து காட்டுமாறு, காரில் இருந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் கூறினர். ஆனால் காரில் இருந்தவர்கள், தங்களுக்கு பெட்டிகளின் பூட்டுகளை திறந்து காட்ட அதிகாரம் இல்லை என கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த காரை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அடையார் 13வது மன்டலத்தில் உள்ள வேளச்சேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, அவர் நடத்திய  விசாரணையில், பிரபல துணிக்கடை மற்றும் நகைகடை ஆகியவற்றில் இருந்து,  5 கோடியே 66 லட்சம் ரொக்கத்தை பெற்று அதனை அடையாறில் உள்ள தனியார் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக எடுத்து செல்வதாக தெரிவித்தனர். அதை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்