ஆவணமில்லாத 2,000 கிலோ அரிசி பறிமுதல்

பெரம்பூர்: பெரம்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே பறக்கும் படை அதிகாரி நந்தகோபால் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, அதில் அரிசி மூட்டைகள் இருந்தன. அதை ஏற்றி வந்த ராணிப்பேட்டை மாவட்டம் கழனி கிராமத்தை சேர்ந்த முத்து (46) என்பவரிடம் விசாரித்தபோது, திருமழிசையில் உள்ள செந்தில்நாதன் என்பவர் ஆரணியில் உள்ள எஸ்.எஸ்.பாலமுருகன் ரைஸ் மில்லில் மொத்தமாக அரிசி மூட்டைகளை ஆர்டர் செய்து அதனை சென்னையில் பல இடங்களில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால், மினி வேனில் இருந்த 2,000 கிலோ அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்