ஆவணமின்றி இயங்கிய ஆம்புலன்ஸ் பறிமுதல்

ஓமலூர், செப். 12: ஓமலூர் வட்டாரத்தில் தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிகளவில் உள்ளது. இங்கு பல ஆம்புலன்ஸ்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தது. அதன்படி ஓமலூர் போலீசார், பாலிகடை பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்றை பறிமுதல் செய்தனர். வெளி மாநிலத்தில் இருந்து ஆம்னி வேனை வாங்கி வந்து, ஆம்புலன்ஸாக மாற்றியது தெரியவந்தது. ஆம்புலன்சாக மாற்றியதற்கான ஆவணங்கள் இல்லை. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், வாகனத்தின் மீது இரு கொம்புகள், பொம்மை, 4 ஹாரன்கள், 4 முகப்பு விளக்குகள், வாகனத்தை சுற்றிலும் சங்குகள் கோர்த்த கருப்பு கயிறுகள் கட்டியதுடன், ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தனர். இந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி