ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காட்டில் பைக் பேரணிக்கு உற்சாக வரவேற்பு: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

பூந்தமல்லி, நவ. 25: பூந்தமல்லி, திருவேற்காட்டில் திமுக இளைஞரணி மாநில மாநாடு குறித்து இருசக்கர வாகன பிரச்சார பேரணிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, சேலத்தில் வரும் டிசம்பர் 17ம்தேதி, மாநில உரிமை மீட்புக்கான திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது. இப்பேரணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, திமுக இளைஞர் அணியின் பைக் பேரணியானது ஆவடி சட்டமன்ற தொகுதியை நேற்று வந்தடைந்தது. அவர்களுக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமையில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், புல்லட் பேரணியானது பட்டாபிராமில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து தொடங்கியது. இதில், எம்எல்ஏ நாசர் புல்லட் ஓட்டி திருவேற்காடு நோக்கி 15 கிலோ மீட்டர் பிரசார பேரணியில் ஈடுபட்டார். இந்த பேரணியில் திமுக இளைஞர் அணியினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், ஆவடி மேயர் ஜி.உதயகுமார், மாநகரச் செயலாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர் நாராயண பிரசாத், பேபி சேகர், பொன் விஜயன், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் திருவேற்காடு பகுதிக்கு வந்த திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மூர்த்தி ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பேரணியில், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பவுல், நகர இளைஞரணி அமைப்பாளர் சங்கர் மற்றும் வட்ட செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவேற்காட்டில் இருந்து புறப்பட்ட இளைஞரணி இருசக்கர வாகன பேரணி வேலப்பன்சாவடி வழியாக பூந்தமல்லி குமணன்சாவடி வந்தது. பூந்தமல்லி நகர திமுக செயலாளர் திருமலை தலைமையில் பட்டாசு வெடித்து, மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் தர், மாவட்ட பிரதிநிதி சுதாகர் மற்றும் நகர நிர்வாகிகள் பூவை தாஜுதீன், துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டில்லி ராணி மலர்மன்னன், அசோக் குமார், லயன் சுதாகர், புண்ணியகோட்டி, அன்பழகன், சௌந்தர்ராஜன், நெல்சன் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர். பேரணியில் வந்தவர்களுக்கு குளிர்பானம், பிஸ்கட், தண்ணீர் வழங்கப்பட்டது.
இதையடுத்து நாசர் எம்எல்ஏ புல்லட் பைக் ஓட்ட, கிருஷ்ணசாமி எம்எல்ஏ பின்னால் அமர்ந்துகொள்ள, பைக் பேரணி பூந்தமல்லி ட்ரங்க் சாலை வழியாக நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம் பகுதிக்கு சென்றது. நசரத்பேட்டை அருகே பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் கமலேஷ் தலைமையில் பட்டாசு வெடித்து மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் அகரம்மேல் ரவி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் இளைஞர் அணி பைக் பேரணி பெரும்புதூர் நோக்கி சென்றது. திமுக இளைஞர் அணியின் இந்த பைக் பேரணிக்கு, திமுகவினர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்