ஆவடி தொகுதியில் ரூ.24.5 லட்சத்தில் 13 புதிய மின்மாற்றிகள்; அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்

ஆவடி:  ஆவடி சட்டமன்றத் தொகுதியில் நேற்றுமுன்தினம் ரூ.24.5 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட 13 மின் டிரான்ஸ்பார்மர்களின் பணிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று துவக்கி வைத்தார். ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் 6வது தெரு, ஜீவானந்தம் தெரு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 19வது தெரு, பட்டாபிராம் பகுதியில் ராமலிங்கபுரம் முதல் தெரு, லட்சுமி நகர், வள்ளலார் நகர் 7வது தெரு, காந்திநகர் 2வது தெரு, திருநின்றவூரில் எம்ஜிஆர் நகர் பிரதான சாலை, திருமுல்லைவாயலில் பாரதியார் நகர், திருவள்ளூர் 4வது தெரு, கலைஞர் 2வது தெரு, செந்தில் நகர், ராஜாஜி தெரு, வைஷ்ணவி நகர் 9வது தெரு ஆகிய 13 இடங்களில் வளைய சுற்றுத்தர அமைப்புடன் கூடிய புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், ஆவடி சட்டமன்றத் தொகுதியில் புதிதாக நிறுவப்பட்ட 13 மின் டிரான்ஸ்பார்மர்களின் பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், ஆவடி கிழக்கு மண்டல பொறுப்பாளர் பேபி சேகர், மண்டல குழு தலைவர் அமுதா பேபி சேகர், மின்வாரிய பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு