ஆவடி சாலையில் மின்விளக்குகள் சீரமைப்பு

ஆவடி: ஆவடி பகுதியில் பருத்திப்பட்டு, திருவேற்காடு, சுந்தர சோழபுரம், கோளடி, அயப்பாக்கம், அயனம்பாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மதுரவாயல் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் முக்கிய சந்திப்பு உள்ளது. இந்த பகுதிகளில் மின்விளக்குகள் சரவர எரியாததால் இந்த பகுதியே இருளில் மூழ்கியது. மேலும் சுந்தர சோழபுரம் கிராம மக்கள் இந்த சாலை வழியாக ஆவடி ரயில் நிலையம், பேருந்து நிலையம் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். தினசரி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் பயணிகளும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.இதற்கிடையில், பல ஆண்டுகளாக குறுகிய சாலையாக இருப்பதாலும், மின்விளக்கு சரிவர இல்லாததாலும் அதிக விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இந்த சாலையை சீரமைக்ககோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இந்த சாலையில் பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மின் விளக்குகள் இல்லாததால் வாகனத்தில் செல்வோர் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில், இதுகுறித்து கடந்த 4ம் தேதி நமது தினகரன் நாளிதழில் ஆவடியில் முக்கிய சாலை இருளில் மூழ்கியிருப்பதாக செய்தி வௌியானது. அதன் எதிரொலியாக நேற்று முக்கிய சாலையில் உள்ள மின் விளக்கை அதிகாரிகள் சீரமைத்தனர். இனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்….

Related posts

கன்னியாகுமரிக்கு கூடுதல் ரயில் திட்டங்கள்: மக்களவையில் விஜய்வசந்த் வலியுறுத்தல்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை