ஆவடியில் ஆக்கிரமிப்பில் உள்ள 142 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை சவுகார்பேட்டை சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் பைராகி மடம் வெங்கடேச பெருமாள் கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது, ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:கோயில் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில் நிலங்கள் எந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தாலும் அவை மீட்கப்படும். சவுகார்பேட்டை பைராகி மடம் சுவாகிலி கோயிலுக்கு சொந்தமான 142 ஏக்கர் நிலம் ஆவடி கோயில்பதாகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் சில நாட்களில் மீட்கப்படும். ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு அவைகள் அறம்சார்ந்த பணிகளுக்கும், கோயிலின் வருவாயை பெருக்கவும் பயன்படுத்தப்படும். கோயில் ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் திருக்கோயில்களின் வரவு, செலவு கணக்கு விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு கூறினார்.கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், சாமனபள்ளி கிராமத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக சென்னையில் முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 30வது தெரு பகுதியில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் கொடியசைத்து புதிய மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் சிகிச்சை தேவைப்படுபவர்களின் வீடுகளுக்கே சென்று டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு