ஆழ்வார்திருநகரி சுகாதார நிலையம் அருகே குப்பை குவியல் அகற்றம்

வைகுண்டம், ஜூன் 9: ஆழ்வார்திருநகரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குவிந்திருந்த குப்பைகள், ஏரல் தாசில்தார் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சி நிர்வாகத்தினரால் அகற்றப்பட்டன. ஆழ்வார்திருநகரி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரேயுள்ள கல் மண்டபத்தில் பயன்பாடற்ற பொருட்கள், குப்பைகள், கிழிந்த துணிகள் மலை போல் குவிந்து கிடந்தன. இவை உடனடியாக அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவியது. இதை உடனடியாக அகற்றுமாறு மக்கள் விடுத்த கோரிக்கை செய்தி தினகரனில் நேற்று படத்துடன் வெளியாகியது. இதையடுத்து ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கல்மண்டபத்தில் குவிந்திருந்த குப்பைகளை உடடியாக அகற்றினர். இதனிடையே இந்த கல் மண்டபம் யாருக்கும் சொந்தமானதா? என எழுந்த சந்தேகத்தை அடுத்து அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தீர்ப்பு உட்பட்டதாக கல் மண்டபம் இருந்ததும் பின்னர் ஆழ்வார்திருநகரி பேரூராட்சிக்கு உட்பட்டதாகவும் தெரியவந்தது. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கல்மண்டபத்தை ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயிலுக்கு வந்துசெல்லும் பக்தர்களோ, திருச்செந்தூர் கோயிலுக்கு நடைபாதையாக வரும் பக்தர்களோ ஓய்வெடுத்து செல்வதற்கு ஏற்றவாறு உரிய பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை