ஆழ்வார்குறிச்சி காக்கும்பெருமாள் சாஸ்தா, சுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

கடையம், மே 8: ஆழ்வார்குறிச்சியில் ராமநதி ஆற்றின் கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற காக்கும்பெருமாள் சாஸ்தா சுடலைமாடசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கொடைவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொடை விழா நாளான நேற்று காலை 5 மணிக்கு மேல் சிவனைந்த பெருமாள் பூஜையும், 8 மணியளவில் பால் குடம் ஊர்வலமும், பகல் 12 மணிக்கு பட்டாணி பாறையில் இருந்து பழம் எறிதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதிய கொடை விழாவும் அன்னதானமும் நடந்தது. மாலை 4.30 மணிக்கு மேல் மஹாஅபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. நள்ளிரவு 12.30 மணிக்கு சாமக்கொடை விழா, ஊட்டுகளம், அர்த்தசாம பூஜையும் நடந்தது. இன்று காலை 10 மணிக்கு மேல் சின்னநம்பி பூஜை நடக்கிறது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது