ஆழித்தேரோட்டத்தையொட்டி வீதிகளில் போடப்பட்டு அகற்றாத ராட்சத இரும்பு பிளேட்டுகள்- விபத்து அபாயத்தில் வாகனஓட்டிகள்

இது உங்க ஏரியாதிருவாரூர் : திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி வீதிகளில் போடப்பட்ட ராட்சத இரும்பு பிளேட்டுகள் அகற்றப்படாததால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் தேரோடும் 4 வீதிகளின் திருப்பங்களில் ஆழித்தேரினை திருப்புவதற்கு ராட்சத இரும்பு பிளேட்டுகள் கொண்டு திருப்பும் பணி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு திருப்பங்களிலும் 4 பிளேட்டுகள் மூலம் போடப்பட்டு திருப்பும் பணி நடைபெற்றது. இந்நிலையில் ஆழித்தேர் முடிவுற்ற நிலையில் வீதிகளில் திருப்பங்களில் போடப்பட்ட ராட்சத இரும்பு பிளேட்டுகள் நேற்று வரையில் அகற்றப்படாமல் அதே இடத்தில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக வெளியூர்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கு இந்த இரும்பு பிளேட்டுகள் கிடப்பது இரவு நேரங்களில் தெரியாமல் போகும் நிலையில் அதன் மூலம் பெரும் விபத்துக்கள் நடைபெறும் அபாயம் இருந்து வருகிறது.இந்நிலையில் நேற்றைய தினமே உள்ளூர் பொதுமக்களே இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர் இந்த இரும்பு பிளேட்டில் எதிர்பாராதவிதமாக சென்றபோது சறுக்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் இந்த இரும்பு பிளேட்டுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்