ஆற்றுப்பகுதியில் புதிய பாலம் கட்ட வேண்டும் நம்புதாளை மக்கள் வேண்டுகோள்

தொண்டி, நவ.5: நம்புதாளையில் பல்லக்கு ஒலியுல்லா தெருவிற்கு செல்லும் வழியில் ஆற்றுப்பகுதியில் உள்ள பாலம் பழுதடைந்து விட்டதால், உடனடியாக புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் பல்லக்கு ஒலியுல்லா தெருவிற்கு செல்வதற்கு கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து தெருவிற்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கல் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தான் தற்போது படையாச்சி தெரு காலனி, பல்லக்கு ஒலியுல்லா தெரு மக்கள் தினமும் கடந்து செல்கின்றனர். மிகவும் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

பல்லக்கு ஒலியுல்லா தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது. இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் இந்த பாலத்தின் வழியாகத்தான் அனைத்து தேவைக்கும் செல்ல வேண்டியுள்ளது. பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இப்பகுதியை சேர்ந்த குமரையா கூறியது, ஆற்றில் பாலம் கட்டித் தரவேண்டும் என்று அனைத்து தரப்பு அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டோம் பலன் இல்லை. 50 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலம் பராமரிப்பே இல்லாமல் சேதமடைந்து விட்டது. நடப்பதற்கு பயமாக உள்ளது. விரைவில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு