ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை-செல்பி எடுப்பதை தவிர்க்க வலியுறுத்தல்

கடலூர் : கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீராக சுமார் ஒரு லட்சம் கன  அடிக்கு மேல் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் இரு  கரைகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின்  கரையோரம்  மற்றும் அதனை சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கடலூர் மாவட்டம் கொள்ளிடம் வடிநில கோட்டம் சிதம்பரம் கோட்ட கட்டுப்பாட்டில் அமைந்த கீழணைக்கு காவிரி டெல்டா பகுதியில் அதிக கனமழை பெய்வதால் மேட்டூர் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 1,00,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து வெள்ள நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனை சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், மேலும், பொது மக்கள் உரிய பாதுகாப்பு ஏதுமின்றி கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன் பிடித்தல், நீர்நிலைகளின் அருகே குழந்தைகளை அனுமதித்தல், கால்நடைகள் மேய்த்தல், பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்களோ அல்லது சுய படங்களோ எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை