ஆறுமுகநேரி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

ஆறுமுகநேரி, ஜூலை 26: ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். மாவட்ட பஞ். தலைவர் பிரம்மசக்தி, ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம், திருச்செந்தூர் ஆர்டிஓ குருசந்திரன், தாசில்தார் வாமனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்புலெட்சுமி வரவேற்றார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். தொடர்ந்து மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற 11ம் வகுப்பு மாணவி ஜெயராணிக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர்கள் திருச்செந்தூர் வாள்சுடலை, ஆறுமுகநேரி நவநீதபாண்டியன், ஆத்தூர் முருகானந்தம், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், ஆறுமுகநேரி கவுன்சிலர்கள் வெங்கடேசன், ஆறுமுகநயினார், சந்திரசேகர், லெட்சுமணன், நகர துணை அமைப்பாளர் அகஸ்டின், தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கிஷோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு