ஆர்.டி.ஓ. அலுவலகங்களை நவீனமயமாக்க செயல் திட்டங்கள் உருவாக்கப்படும்; அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறை  அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆட்சியில் பல்வேறு குளறுபடிகளால், பொது மக்களுக்கு கணினி மற்றும் இணையதளம் மூலம் நடைபெற வேண்டிய பணிகள் உரிய நேரத்தில் நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டு, பொதுமக்கள் அலைச்சல் மற்றும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த நிர்வாகத்தை சீர்செய்யும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, போக்குவரத்துத் துறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தேவைகளான தகுதிச் சான்றிதழ் வழங்குதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் வாகனங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைகளை, மேலும் நவீனமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிதில் சுலபமாக கிடைக்க போக்குவரத்து துறையில் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் சீரிய ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகளை களையப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் காலதாமதமின்றி, பொதுமக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி