ஆர்.கே.பேட்டை மலைப்பகுதியில் வெடி பொருட்கள் செயலிழப்பு

பள்ளிப்பட்டு: கும்மிடிப்பூண்டி பகுதியில் கைப்பற்றப்பட்ட சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளை ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கதனநகரம் மலைப்பகுதியில் வைத்து செயலிழப்பு செய்ய மாவட்ட போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அங்குள்ள கல்குவாரி தேர்வு செய்தனர். ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முதல் 5 நாட்களுக்கு வெடி பொருட்களை செயலிழப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக வருவாய் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணி நடைபெற்று வருவதால், மலைப்பகுதிக்கு அருகில் உள்ள கிராம மக்கள் அடுத்த 5 நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், விவசாய நிலங்களுக்கு செல்ல சென்று விவசாய பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மேலும், கால்நடைகளை வளர்ப்போர் மேய்ச்சலுக்கு செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி