ஆர்.ஐ., லஞ்சம் கேட்பதாக திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு

நரசிங்கபுரம், ஜன.10: நரசிங்கபுரம் நகராட்சியில் பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, லஞ்சம் கேட்பதாக கூறி, வருவாய் ஆய்வாளருடன் திமுக பெண் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 8வது வார்டு கவுன்சிலராக புஷ்பாவதி உள்ளார். இவரது வார்டுகளில் குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம் கேட்டு மனு அளிக்கும் பொதுமக்களின் மனுக்கள் மீது நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று திமுக கவுன்சிலர் புஷ்பாவதி நகராட்சி அலுவலகம் சென்று வருவாய் ஆய்வாளர் சரவணனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து கவுன்சிலர் புஷ்பாவதி கூறுகையில், நகராட்சியில் 200 மனுக்களுக்கு மேல் பெண்டிங்கில் உள்ளது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி கேட்டால், லஞ்சம் கேட்கிறார். இதைப்பற்றி நகரமன்ற கூட்டத்திலும் கூறியுள்ளேன். அப்போது ஒரு மாதத்திற்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால், இதுவரை செய்து தரப்படவில்லை. பலமுறை ஆணையரிடமும் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை செய்து தருவேன் என்று கூறுகிறார். லஞ்சம் வழங்காததால் பணிகளை இழுத்தடிக்கிறார், என்றார். பெண் கவுன்சிலர் வாக்குவாதத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு