ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கோக்கால், காா்டன்மந்து, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் நேற்று காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதற்காக, நீலகிாி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூா் (தனி) ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 868 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகர பகுதிகளை விட கிராம பகுதிகளில் உள்ள மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர்.இதனால், கிராம பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு துவங்கிய காலை 7 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக கோக்கால், காா்டன்மந்து, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோத்தர், தோடர் ஆதிவாசி பழங்குடியின மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்து வாக்களித்து சென்றனர். கடந்த காலங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் வாக்களிக்க போதிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தற்ேபாது வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. இதனால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.3 கி.மீ நடந்து ெசன்று வாக்களித்த குரும்பர் பழங்குடியின மக்கள்குன்னூர் தொகுதியில் மூன்று கி.மீ. நடந்தே சென்று குரும்பர் பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள புதுக்காடு மற்றும் கோழிக்கரை உட்பட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள குரும்பர் இன பழங்குடியின மக்கள், வனப்பகுதி மற்றும் சாலை வழியாக 3 கி.மீ. தூரம் நடந்தே பர்லியார் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களித்தனர்.கொரோனா பாதிப்பு காரணமாக, சமூக இடைவெளியை பின்பற்றியும், நீண்ட வரிசையில் நின்று ஆதிவாசி மக்கள் வாக்களித்தனர். இந்த பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலையிலும், அரசியல் கட்சிகள் வாக்கு கேட்டு வராத நிலையிலும் பழங்குடியின மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளனர்.குன்னூரில் வாக்களித்த 98 வயது மூதாட்டி குன்னூரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் 98 வயது மூதாட்டி நேற்று வாக்களித்து சென்றார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இந்நிலையில், குன்னூர் மிஷின்ஹில் பகுதியை சேர்ந்த பெள்ளியம்மா (98) தனது வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என தனது மகனிடம் உதவி கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஊழியர்கள் உதவியுடன் குன்னூர் டவுன் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். அவருக்கு அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்….

Related posts

தூத்துக்குடி அருகே மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடையடைத்து உண்ணாவிரதப் போராட்டம்

எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி