ஆர்கே.நகர் தொகுதியை புறக்கணித்தவர்களை நாங்கள் புறக்கணிப்போம்

தண்டையார்பேட்டை ராஜ் (பழ வியாபாரி) ஏழை எளிய அடித்தட்டு மக்கள் அதிகம் வாழும் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி வடசென்னையில் மிகவும் பின்தங்கிய தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் எத்தனையோ கட்சிகளின் எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்களால் இந்த தொகுதிகளில் எந்த வித வளர்ச்சியும் அடையவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்தோம். அதன்படி ஆர்கே நகர் தொகுதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால், டிடிவி.தினகரன் எம்எல்ஏவாக வந்த பிறகு இந்த தொகுதியை ஆளும்  அரசு கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இந்த தொகுதிக்கு ஜெயலலிதா இருந்தபோது என்னவெல்லாம் செய்தனரோ இப்போது தற்போது எதுவும் செய்யவில்லை. டிடிவி தினகரன் எதிராக உள்ள எடப்பாடி அரசு ஆர்கே நகர் தொகுதியை புறக்கணித்து விட்டது. எங்களின் தொகுதி எம்எல்ஏவோ ஆர்.கே.நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கும் வருவதில்லை. மக்கள் குறைகளை சட்டசபையில் கூட சொல்வதற்கு செல்லவில்லை. யார் மீதுள்ள கோபத்திலேயே மக்கள் குறையை தெரிவிக்காமல் சட்டசபையை புறக்கணித்து விட்டார். இதனால், எங்களது குறைகளை யாரிடம் சொல்வது என்ற நிலை தான் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது இந்த தொகுதி எம்எல்ஏ வேறொரு தொகுதிக்கு மாறி சென்று விட்டார். ஆனால், எங்களது நிலைமை மட்டும் இன்னும் மாறவில்லை. எங்களது தொகுதியை புறக்கணித்த அதிமுகவே நேரடியாக போட்டியிடுகிறது. எனவே, இந்த தேர்தலில் அவர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எங்களது தொகுதி மக்கள் தக்க பாடம் அவர்களுக்கு புகட்டுவார்கள். …

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்