ஆர்எஸ்.மங்கலம் சாத்தமங்கலத்தில் மாடக்கோட்டை முனீஸ்வரர் ஆலய வைகாசி உற்சவ திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் வைஆர்எஸ்.

 

மங்கலம், ஜூன் 1: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலத்தில் மாடக்கோட்டை  முனீஸ்வரர் ஆலயத்தின் 31ம் ஆண்டு வைகாசி உற்சவ திருவிழா மற்றும் 72ம் ஆண்டு விழா கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். நேற்று முன்தினம் இரவு சாத்தமங்கலம் விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் பூத்தட்டு எடுத்து முனீஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து பூச்செரிதல் விழா நடந்தது. நேற்று முக்கிய விழாவான பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. முன்னதாக கும்பம் மற்றும் கொடை மரியாதையுடன் தனசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கிராமத்தினர் மற்றும் விழாவின் சார்பாக மரியாதை செய்யப்பட்டு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் பால், பறவை, மயில், இளநீர், பன்னீர், பால்செம்பு உட்பட பல்வேறு விதமான காவடிகளை எடுத்தும், அலகு குத்தி வந்தும் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் உள்ளுர் பக்தர்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்த்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்படுகளை கோயில் டிரஸ்ட்டி கருப்பத்தேவர் மற்றும் அவரது மகனும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், சென்னை பெருநகர மாநகராட்சியின் நிதிநிலை குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவருமான கே.கே.நகர் தனசேகரன், அவரது குடும்பத்தினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இன்று கிடாவெட்டுடன் விழா நிறைவடைய உள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு