ஆர்எஸ்.மங்கலம் அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

 

ஆர்எஸ்.மங்கலம், ஆக. 18: ஆர்எஸ்.மங்கலம் அருகே 700 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ராமநாதபுரம் குடிமைப்பொருள் குற்றப்பிரிவு போலீசார் எஸ்ஐ மோகன் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திரா நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, அவ்வழியே வந்த காரில் 50 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதனைதொடர்ந்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோத்தாடி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சங்கர் (50), சேகர் மகன் பெருவழுதி (30) ஆகிய இருவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட வாகனம் மற்றும் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். விசாரனையில், இந்த ரேஷன் அரிசியை காரைக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது.

 

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்