ஆரோக்ய ரக்‌ஷக் மருத்துவ காப்பீடு திட்டம்

செங்கல்பட்டு: நாடு முழுவதும் எல்ஐசி சார்பில் பொதுமக்களுக்கு தேவையான ஆரோக்ய ரக்‌ஷக் என்ற புதிய மருத்துவ காப்பீடு திட்ட துவக்கவிழா செங்கல்பட்டு எல்ஐசி கிளை சார்பில் நடந்தது. சிறப்பு விருந்தினராக  மருத்துவர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். செங்கல்பட்டு கிளை முதுநிலை மேலாளர் முத்துராமன், இது மக்களுக்கு மிக முக்கியமான  காப்பீடு திட்டம்.  மருத்துவ செலவுகளை ஈடுசெய்யக் கூடிய  மகத்தான இத்திட்டத்தில் பிறந்து 3 மாதம் முடிவடைந்த பச்சிளங் குழந்தைகள் முதல் 80 வயது முதியோர் வரை இணைந்து பயடையலாம் என்றார். திருக்கழுக்குன்றம் கிளை மேலாளர் குடியரசு,  கூடுவாஞ்சேரி கிளை மேலாளர் ஸ்ரீதரன், கல்பாக்கம் கிளை மேலாளர் சுனிதா, நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு