ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு பணத்தை மீட்டுத்தர கோரி நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவடி: ஆருத்ரா நிதி நிறுவனம் என்ற பெயரில் தங்க நகைகள் மற்றும் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி வழங்கும் தொழிலை மேற்கொண்டு வந்தது. ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள இதன் கிளையில், திருமுல்லைவாயல் ஜெயா நகர் நரிக்குறவர்கள் அதிக வட்டி பணத்திற்கு ஆசைப்பட்டு, சுமார் 30க்கும் மேற்பட்டோர் 1 லட்சம் ரூபாய் வீதம் 50 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். ஆரம்பத்தில் வட்டி பணம் கிடைத்ததை நம்பி, பலர் முதலீடு செய்தனர். இந்நிலையில், மோசடி புகார் காரணமாக ஆருத்ரா நிறுவனம் மூடபட்டு, அதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவடி 10வது மாமன்ற உறுப்பினர் ஜான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் பங்கேற்று ஆருத்ரா நிதி நிறுவனத்தை கண்டித்தும், ஏமாற்றப்பட்ட பணத்தினை தமிழக அரசு மீட்டு தர வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு