ஆரல்வாய்மொழி அருகே அரசு பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்

ஆரல்வாய்மொழி: நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் அனிஷ்ராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆரல்வாய்ெமாழி பகுதியில் ஒரு அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.  பள்ளியில் 7ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மற்றும் கணித   வகுப்புகள் நடத்தி வருகிறார்.  இந்நிலையில் கடந்த 11ம் தேதி 7ம்   வகுப்புக்கு பாடம் நடத்தி  முடிந்ததும் 2  மாணவிகளை அழைத்து அருகில் அமர வைத்து, திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள்  அங்கிருந்து  செல்ல முயன்றனர். மற்ற மாணவர்கள் வந்ததும்  ஆசிரியர் நழுவி சென்று விட்டார். இது குறித்து  பாதிக்கப்பட்ட  மாணவிகள் பள்ளி தலைமையாசிரியரிடம் சென்று, ஆசிரியர் தகாத  முறையில் நடந்து ெகாண்டதாக புகார் கூறினர். இதையடுத்து தலைமையாசிரியர்  மற்ற மாணவிகளை அழைத்து  விசாரித்தார். அவர்களும் மாணவிகளை கைகளை  பிடித்து இழுப்பது, கன்னங்களை கிள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார் எனவும், சில நேரங்களில் அத்துமீறி நடப்பதாகவும் அடுக்கடுக்காக புகார் கூறினர். இதையறிந்த தமிழ் ஆசிரியர் 15 நாள் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். சம்பவம் குறித்து மாணவிகள் பெற்றோரிடம் கூறினர். அவர்களும் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரிடம் முறையிட்டனர். அவர் உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்….

Related posts

கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் தாய் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்பு

அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்