ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரி சுரண்டையில் ஆர்ப்பாட்டம்

சுரண்டை,அக்.21: சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துவது, தாமிரபரணி கூட்டு குடிநீர் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் சீராக வினியோகம் செய்வது, சுரண்டையை தனி தாலுகாவாக அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுரண்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார்.இரட்டை குளம் செயலாளர் வேலுச்சாமி, சுரண்டை நகர செயலாளர் வைரவன் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் வீரபாலன் ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றியனார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் நிர்வாகிகள் காளியப்பன், முத்துசாமி, கணேசன், சம்சுதீன், அருள்ராஜ், பன்னீர்செல்வம், வேலாயுதம், ஜெயலட்சுமி, சீதையம்மாள், மாரியம்மாள், சுதா, அந்தோணியம்மாள், காளியம்மாள், கற்பகவல்லி, வைரமுத்து, காமராஜ், ராசையா, காஜாமைதீன், ஆறுமுகம், பிச்சையா, ராமையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை