ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் திடீர் ஆய்வு: நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

மதுரை, ஏப்.12: மதுரை மாநகராட்சி செல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளான சாலைகள் அமைத்தல், குடிநீர் குழாய்கள் பதித்தல், பாதாள சாக்கடை திட்டம், மருத்துவமனைகள் விரிவாக்கம், நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு மண்டலம் வார்டு 23 செல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளிகள் பதிவு செய்யும் இடம், நோயாளிகள் காத்திருக்கும் பகுதி, மருத்துவர் அறை ஊசி மற்றும் சுருள் படம் எடுக்கும் இடம், மருந்து கிடங்கு, ஆய்வகம், காய்ச்சல் உள்நோயாளிகள் பிரிவு,

கண் மருத்துவ அறை, பெண்கள் நல மருத்துவர் அறை, ஸ்கேன் அறை, அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ அறை பேறுகால பின்கால கவனிப்பு அறை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அறைகளை பார்வையிட்டார். மேலும் மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை சரிபார்த்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் வினோத்குமார், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் ஷர்மிளா, குமரவேல், உதவிப்பொறியாளர்கள் கருப்பையர, ராஜசீலி, உதவி செயற்பொறியாளர் (திட்டம்) காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் இருந்தனர்.

Related posts

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னையில் குடிநீர் விநியோக அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த நாளை முதல் கணக்கெடுப்பு பணி: குடிநீர் வாரியம் தகவல்

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு