ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக அதிமுக பாமக உள்பட 29 பேர் போட்டி தேர்தல் களம் சூடு பிடித்தது இறுதி வேட்பாளர் பட்டியல் வௌியீடு

திருவண்ணாமலை, மார்ச் 31: ஆரணி மக்களவைத் தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், திமுக, அதிமுக, பாமக உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. அதைத்தொடர்ந்து, 28ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, ஆரணி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 32 பேரில, நேற்று 3 சுயேட்சைகள் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். எனவே, ஆரணி தொகுதியில் 29 வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் இடம பெற்றுள்ளனர்.

ேமலும், தேர்தல் நடத்தும் அலுவலரான டிஆர்ஓ பிரியதர்ஷினிக, தேர்தல் பார்வையாளர் சுஷாந்த் கவுரவ் ஆகியோர் முன்னிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்ைச வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது, வேட்பாளர்கள் மற்றும் முகவர்களும் பங்கேற்றனர். அதன்படி, ஆரணி தொகுதியில் எம்.எஸ்.தரணிவேந்தன்(திமுக). ஜி.வி.கஜேந்திரன்(அதிமுக), ஏ.கணேஷ்குமார்(பாமக), துரை (பகுஜன் சமாஜ்), பாக்கியலட்சுமி(நாம் தமிழர்), சக்திவேல் (தாக்கம் கட்சி), சேட்டு (வீரோ கீ வீர் இந்தியன் கட்சி), துருகன்(ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி), நாகராஜன் (வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி), மணவாளன்(அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம்), சுயேட்சைகள் அருள், எல்லப்பன், எழிலரசு, பி.கணேஷ், மு.கணேஷ்குமார், ஏ.கஜேந்திரன், ஜே.கஜேந்திரன், கார்வண்ணன், செந்தில்குமார், சேகர், தரணி, தாமோதரன், பாபு, பெரோஸ்கான், மணிகண்டன், முகமதுசாதிக், முருகேசன், வெங்கடேசன், ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ஆரணி தொகுதியில் 29 பேர் களத்தில் இருந்தாலும், திமுக, அதிமுக, பாமக கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும், ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிக பட்சம் நோட்டோவுன் சேர்த்து 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். எனவே, 15 வேட்பாளர்களுக்கும் அதிமானோர் தேர்தலில் போட்டியிட்டால், கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (பேலட் யூனிட்) பயன்படுத்த வேண்டும். அதன்படி, ஆரணி மக்களவைத் தொகுதியில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை