Wednesday, July 3, 2024
Home » ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு வேட்பு மனுதாக்கல்

ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு வேட்பு மனுதாக்கல்

by kannappan

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜ வேட்பாளராக நடிகை குஷ்பு களமிறக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வள்ளூவர் கோட்டம் அருகில் இருந்து தொண்டர்களுடன் அவர் ஊர்வலமாக சென்றார். இதில் அதிமுக நிர்வாகிகள் டி.சிவராஜ், சின்னய்யன், கராத்தே தியாகராஜன், விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். * 4 குற்ற வழக்கு, ரூ.17 கோடி சொத்துவேட்பாளர் குஷ்பு நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல்: குஷ்பு மீது தமிழகம் முழுவதும் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கையிருப்பாக ₹2 லட்சத்து 15 ஆயிரத்து 600ம், அவரது கணவர் சுந்தர்.சி கையிருப்பாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, குஷ்பு பெயரில் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி, 2 கார்கள் மற்றும் கணவர் பெயரில் 3 கார்கள், 495 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி தனது பெயரில் ரூ.4 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 693 மதிப்பில் அசையும் சொத்துக்களும், தனது கணவர் பெயரில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 98 ஆயிரத்து 58 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் தனது முதல் குழந்தை பெயரில் 11 லட்சத்து 89 ஆயிரத்து 304 மதிப்பிலும், இரண்டாவது குழந்தை பெயரில் ரூ.12 லட்சத்து 560 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது பெயரில் செங்கல்பட்டு முட்டுக்காடு பகுதியில் சொகுசு பங்களா, திருக்கழுகுன்றத்தில் பங்களா, கணவர் பெயரில் மேடவாக்கத்தில் பங்களா, கோயம்புத்தூரில் பங்களா என தனது பெயரில் ரூ.17 கோடியே 99 லட்சம் 87 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையா சொத்துக்களும், கணவர் பெயரில் ரூ.16 கோடியே 57 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும்  உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தனது பெயரில் ரூ.3 கோடி 45 லட்சம், 13 ஆயிரம் 950 மதிப்பிலும், கணவர் பெயரில் 55 லட்சம் 55 ஆயிரம் 939 மதிப்பில் கடன்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்….

You may also like

Leave a Comment

twelve + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi