ஆப்கானிஸ்தான் 545/5 டிக்ளேர்

அபுதாபி: ஜிம்பாப்வே அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 545 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 307 ரன் எடுத்திருந்தது. ஹஷ்மதுல்லா ஷாகிதி 86 ரன், கேப்டன் அஸ்கர் ஆப்கன் 106 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 307 ரன் சேர்த்தது.அஸ்கர் ஆப்கன் 164 ரன் எடுத்து (257 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) சிக்கந்தர் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த நசீர் ஜமால் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஹஷ்மதுல்லா இரட்டை சதம் விளாசினார். ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 545 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. ஹமதுல்லா 200 ரன் (443 பந்து, 21 பவுண்டரி, 1 சிக்சர்), ஜமால் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன் எடுத்துள்ளது. பிரின்ஸ் 29 ரன், கெவின் கசுஸா 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டன் நடைபெறுகிறது….

Related posts

சில்லி பாயின்ட்…

சீனா ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் பெகுலா

கிரிக்கெட்டில் இருந்து பிராவோ ஓய்வு