ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம்: நாளை மறுதினம் ஏற்பாடு

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விளக்கம் அளிக்க நாளை மறுதினம் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்த பிறகு அங்கிருந்து இந்தியர்கள் விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 730 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. இன்னமும் இந்தியர்கள் காபூல் விமான நிலையத்தில் நாடு திரும்ப காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஆப்கனில் இன்னும் எத்தனை இந்தியர்கள் சிக்கியுள்ளவர்கள், அவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள், ஆப்கன் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு நாளை மறுதினம் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கன் நிலவரம் குறித்தும் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிப்பார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறி உள்ளார். மேலும், ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘146 இந்தியர்கள் மீட்பு’* ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 392 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று 146 பேர் தோகாவில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். * ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தனது டிவிட்டரில், “இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சீக்கியர்களின் 3 புனித நூல்கள், 46 சீக்கியர்கள், இந்துக்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வரப்பட்டனர்,’’ என்று கூறியுள்ளார்.’அமெரிக்காவை மிரட்டும் தலிபான்கள்’வரும் 31ம் தேதியுடன் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வாபஸ் பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்துள்ளார். இந்நிலையில் ‘‘ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனைத்து படைகளும் வாபஸ் பெறப்பட வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து அவகாசத்தை நீட்டிக்க கோரினால் அது முடியாது. அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்,’’ என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர். …

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு