ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன?.. சொந்த நாட்டினரை தாயகம் அழைத்துச் செல்ல உலக நாடுகள் தீவிரம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, அங்கு தலிபான்கள் அட்டூழியம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. நாட்டின் மூன்றில் 2 பங்கு தலிபான்கள் வசமாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தாலிபான்கள் தலைநகரை சுற்றிவளைத்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையையொட்டிய பக்திகா மாகாணத்தின் தலைநகரை நேற்று கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன?தற்போது தலைநகர் காபூலில் புறநகர் பகுதிகளில் தாலிபான் படைகள் முகாமிட்டுள்ளனர். ஆட்சியை ஒப்படைத்தால் காபூலில் தாக்குதல் நடத்தப்படாது என்று அரசுக்கு தாலிபான்கள் நிபந்தனை விதித்தன. ஆப்கான் அதிபர் மாளிகையில் அரசு தரப்புடன் தாலிபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பதவி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிபர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. அஷ்ரப் கானி பதவி விலக மறுத்தால் சுட்டுக்கொல்லப்படலாம் என்று அவரது முன்னாள் ஆலோசகர் அச்சம் தெரிவித்துள்ளார். தாலிபான்கள் இறுதி எச்சரிக்கைஆப்கானிஸ்தானில் அரசு படைகள் நிபந்தனையின்றி சரணடையுமாறு தாலிபான்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன. அரசு படைகள் சரணடைந்தால் உரிய பாதுகாப்பு தருவதாக தாலிபான்கள் உறுதியளித்துள்ளனர். அமைதி வழியில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதையே விரும்புவதாக தாலிபான்கள் விளக்கம் அளித்துள்ளனர். காபூல் மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் நேராத என்றும் உத்தரவாதம் அளித்துள்ளனர். காபூலை காலி செய்யும் உலக நாடுகள் காபூலை தாலிபான்கள் சுற்றிவளைத்ததால் தூதரகங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் காலி செய்கின்றன. காபூலில் வசிக்கும் அமெரிக்கர்களை பத்திரமாக அழைத்து செல்ல 5,000 துருப்புகளை அதிபர் பைடன் அனுப்பினார். காபூலில் உள்ள இந்தியர்களை அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்றிரவு டெல்லி திரும்புகிறது. இடைக்கால அதிபராக அலி அஹ்மது ஜலாலி நியமனம்?இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக அலி அஹ்மது ஜலாலி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 19-ம் தேதி தாலிபான் ஆட்சிப் பொறுப்பேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அதிபர் அஷ்ரப் கானி தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

காஷ்மீர் விவகாரத்தில் வன்முறை பற்றி பாக். பேசுவது அப்பட்டமான பாசாங்குத்தனம்: ஐநாவில் இந்தியா பதிலடி

அமெரிக்காவில் புயல் தாக்கி 52 பேர் பலி

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்: ஈரான், ஈராக் இரங்கல்; மத்திய கிழக்கில் போர் தீவிரம்