ஆப்கானில் தீவிரமடையும் தலிபான்கள் ஆட்சி: வறுமை காரணமாக பெற்றோர்களே குழந்தைகளை விற்கும் அவலம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் மத ரீதியான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 2021 ஆகஸ்ட் 15-ல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைபற்றிய பின், ஆப்கானிஸ்தான் முழுவதும் இஸ்லாமிய மதச் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மூடப்பட்ட பெண்களுக்கான பள்ளிகள் எதுவும் இதுவரை திறக்கப்படவில்லை. பல்கலைகழகங்களில் பெண்களுக்கும்,  ஆண்களுக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மார்ச் 27-ல், பூங்காக்கள் மற்றும் இதர பொது இடங்களில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக அமர்ந்து பேச தலிபான் அரசு தடை விதித்தது. ஆப்கானிஸ்தான் அரசு துறைகளில் பணி புரியும் ஆண்கள் அனைவரும் இஸ்லாமிய முறைப்படி தாடி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் ஆணையிடப்பட்டுள்ளது. தாடி வைத்துக்கொள்ளாதவர்களும், இஸ்லாமிய முறைப்படி பாரம்பரிய ஆடைகளை அணியாதவர்களும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தலிபான் அரசு அறிவித்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர், ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகளை தலிபான் இயக்கத்தினர் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை மோசமடைந்துள்ளதால், பெற்றோர்கள் தம் குழந்தைகளை விற்பது, பணத்திற்காக சிறுநீரகத்தை விற்பது போன்றவை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன….

Related posts

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் குழந்தைகள் தேர்வு செய்யும் திரைப்படங்களுக்கு விருது: வண்ணமயமாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி மேடை

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கு தடை: பாகிஸ்தான் அரசு முடிவு

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு