ஆபத்தான மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு:  பேரணாம்பட்டு அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதி ரங்கம்பேட்டை கிராமத்தில் சுமார் 400 வீடுகளில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.பழமையான இந்த  மேல்நிலை நீர் தேக்க  தொட்டியின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து தானாகவே உதிர்ந்து வருகிறது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் போர்க்கால அடிப்படையில் மேல் நிலை நீர் தேக்க தொட்டியை சரி செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை