ஆபத்தான மரங்கள் அகற்றம்

கொடைக்கானல், ஜூலை 9: கொடைக்கானல் நகர் பகுதியின் பல்வேறு இடங்களில் ஆபத்தான விழும் நிலையில் மரங்கள் உள்ளன. இதுபற்றி நகராட்சிக்கு அந்தந்த பகுதி மக்கள் புகார் செய்திருந்தனர். இங்கிருந்த மரங்கள் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு மீதும் அருகிலிருந்த குடியிருப்பு பகுதிகள் மீதும் விழும் நிலையில் ஆபத்தாக இருந்தது. தற்போது இவை அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டது.

இதற்கு இப்பகுதி மக்கள் நகராட்சிக்கு நன்றி தெரிவித்தனர். இதற்கிடையே அண்ணா சாலை பகுதியில் ஆபத்தான மரங்கள் முறையாக வெட்டப்படுகின்றனவா என நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் அப்பாஸ் அலி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை