ஆபத்தான திறந்தவெளி கிணறுக்கு மூடி

கோவில்பட்டி, ஜூலை 7: கீழக்கரந்தையில் ஆபத்தான நிலையில் இருந்த திறந்தவெளி கிணறுக்கு தினகரன் செய்தி எதிரொலியாக மூடி போடப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவில்பட்டி அருகே கீழக்கரந்தை கிராமத்தில் பள்ளி மற்றும் குடியிருப்புகள் அருகே திறந்தவெளியில் தரைமட்டத்தில் இருக்கும் கிணற்றால் ஆபத்து வாய்ப்பு இருந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உடனடியாக தரைமட்டத்தில் இருக்கும் கிணற்றை சுற்றி பக்கவாட்டு சுவர் எழுப்பி மூடி போட்டு மூட வேண்டும். இல்லையென்றால் நிரந்தரமாக மூட வேண்டும் என கடந்த 14ம் தேதி கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கிணற்றுக்கு பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டு அதன் மேல் நிரந்தரமாக மூடி போடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நிம்மதியடைந்து உள்ளனர். மேலும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த தினகரன் மற்றும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்திற்கு கீழக்கரந்தை மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை