ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த உணவக ஊழியர் காந்திராஜன் ஆன்லைன் சூதாட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கடந்த ஒரு வாரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பறிபோன 3வது உயிர் இதுவாகும். இதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி ஆட ஒரு மாணவன் மூதாட்டியை கொன்று கொள்ளையடித்தார். குடியாத்தம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் அடித்துக் கொல்லப்பட்டார். ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்வது தினசரி நிகழ்வாகி விடும். மதுவும், லாட்டரி சீட்டும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை எவ்வாறு சீரழித்தனவோ, அதை விட மோசமான சீரழிவுகளை ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்துகின்றன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…