ஆன்டிபயாட்டிக் ஆபத்து

நன்றி குங்குமம் டாக்டர் ‘ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவது பொதுமக்களிடம் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. இது முற்றிலும் தவறானது. சளி அல்லது சாய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகுவதும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் மட்டுமே வாங்கி உட்கொள்வது நல்லது’ என்று காஷ்மீர் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பிரசவகால அபாயத்தை தவிர்க்க…கர்ப்பிணிகள் தங்களுடைய முதுகுப் பக்கத்தை கீழே வைத்து, மல்லாந்து படுத்துத் தூங்குவது ஒரு முறை. பக்கவாட்டில் ஒருபுறமாக சாய்ந்து படுத்து உறங்குவது இன்னொரு முறை. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு இரண்டாவது முறையே பாதுகாப்பானது என்று Lancet இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு கூறுகிறது. பக்கவாட்டில் படுத்துத் தூங்கும்போது, கருவில் இருக்கும் குழந்தைக்குச் செல்கிற ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.தொகுப்பு: குங்குமம் டாக்டர் டீம்

Related posts

உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய் சிகிச்சை!

மனவெளிப் பயணம்

எலும்பியல் சிகிச்சையும் CT ஸ்கேன்களும் ஒரு பார்வை!