ஆந்திர மாநில ஆளுநர் ஸ்ரீ விஸ்வபூஷண் ஹரிசந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி: தமிழிசை நலம் விசாரிப்பு..!

அமராவதி: ஆந்திர மாநில ஆளுநர் ஸ்ரீ விஸ்வபூஷண் ஹரிசந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாநில அரசுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.இந்நிலையில் ஆந்திர ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பாதுகாவலர், உதவியாளர், செவிலியர்,தூய்மை பணியாளர் என அனைவருக்கும்கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதியான ஆந்திர மாநில ஆளுநர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, ஆந்திர மாநில ஆளுநரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்….

Related posts

கடந்த 7 ஆண்டுகளில் பலமடங்கு உயர்ந்த விலை மாபியாக்களால் அயோத்தி நிலங்கள் அபகரிப்பு: பிரியங்கா காந்தி, அகிலேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: தொழில்துறை வல்லுநர்களும் பங்கேற்பு

உச்சநீதிமன்ற நீதிபதியாக மகாதேவன் பெயர் பரிந்துரை!