ஆந்திர மாநிலம் நெல்லூரில் 10,000 போலி கோழிமுட்டை விற்பனை!: பொதுமக்கள் அதிர்ச்சி…தலைமறைவான வியாபாரிக்கு போலீஸ் வலை..!!

நெல்லூர்: ஆந்திராவில் பொதுமக்களிடம் 10,000 போலி கோழி முட்டைகளை விற்பனை செய்துவிட்டு தப்பியோடிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வரிகுண்டப்பாடு மண்டலத்தில் மினி லாரி ஒன்று நேற்று காலை ஊர் ஊராக முட்டை விற்பனை செய்திருக்கிறது. குறைந்த விலைக்கு தருவதாக கூறியதால் ஏராளமானோர் முட்டைகளை வாங்கி சென்றிருக்கின்றனர். 30 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டி 130 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றனர். இதனால் ஒருமணி நேரத்தில் அனைத்து முட்டைகளும் விற்று தீர்த்திருக்கின்றனர். வாங்கிய முட்டைகளை பயன்படுத்திய பின்னரே அது போலி முட்டை என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது. பலமணி நேரம் ஆகியும் முட்டைகள் வேகாமல் இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முட்டையை உடைக்க முயன்றும் அது உடையவில்லை. இதனால் மொத்தமாக அனைவரும் ஏமாற்றப்பட்டதை உணர்த்த பொதுமக்கள் இதுகுறித்து வரிகுண்டப்பாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலி முட்டையை விற்று தப்பியோடிய வியாபாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். …

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்