ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அம்பத்தூர்: சென்னையில் பொது விநியோக திட்டத்தில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசியை, சிலர் மொத்தமாக வாங்கி, ஆந்திராவுக்கு கடத்துவதாக, அம்பத்தூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையில் தனிப்படை போலீசார், தீவிர கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பின்புறம் கொருக்குபேட்டை ரயில் நிலைய சுற்றுச்சுவர் அருகில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்றபோது, 56 மூட்டைகளில் 2 டன் எடையுள்ள ரேஷன் அரிசி இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பை சேர்ந்த குப்பம்மாள் (55), கும்மிடிப்பூண்டி தாலுகா எளாவூர் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த லட்சுமி (55) ஆகியோர், இந்த ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது