ஆந்திராவில் சரக்கு லாரியின் பின்புறத்தில் மினி லாரி பலமாக மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு : 14 பேர் படுகாயம்!!

ஹைதராபாத் : ஆந்திராவில் சாலையோரம் நின்று கொண்டு இருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் மினி லாரி பலமாக மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த 39 பேர் டாடா ஏஸ் வாகனத்தில் ஸ்ரீசைலம் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது, பலநாடு மாவட்டம் Rentachintala கிராமம் அருகே பழுது காரணமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் வாகனம் தலைகீழாக உருண்டது.இதில் மினி லாரியில் பயணித்த 39 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டு நரசராவ்பேட்டையில் உள்ள குர்சாலா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பின்னர், உயிரிரந்தவர்களின் 7 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.டாடா ஏஸ் வாகனத்தின் ஒட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலேயே விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் கோட்டம்மா, (1), கோட்டம்மா (20), கோட்டேஸ்வரம்மா (3), எம்.வி. ரமணா (20), பி.லட்சுமிநாராயணா (3), கே.ரமாதேவி (20) மற்றும் பத்மா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை