ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு 1500 டன் பச்சரிசி மூட்டைகள் வந்தது

புதுக்கோட்டை, ஜூன் 29: ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியிலிருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு வந்த 1300 டன் பச்சரிசி மூட்டைகள் 50க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்பது நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவிலிருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு 1300 டன் பச்சரிசி மூட்டைகள் நேற்று காலை வந்தடைந்தது.

இதனையடுத்து அந்த மூட்டைகளை 50க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 9 நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு அனுப்பும் பணி அதிகாரிகளின் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. பின்னர் அந்த கிடங்கிலிருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்க அங்கிருந்து அரிசி மூட்டைகள் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்