ஆந்திராவிலிருந்து தஞ்சாவூர் வழியாக லாரியில் கடத்தி வந்த 1.25 கோடி கஞ்சா பறிமுதல்: 14 பேர் அதிரடி கைது

தஞ்சை: தஞ்சாவூர் நகரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தனிப்பைடை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். பீகாரில் உள்ள அனல் மின் நிலையத்திலிருந்து பழுது பார்ப்பதற்காக தமிழ்நாட்டுக்கு இயந்திரம் கொண்டு வந்தது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார், இயந்திரத்தை முழுமையாக சோதனையிட்ட போது, 250 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா பொட்டலங்கள் வேலூர் வழியாக வந்து வேதாரண்யம், முத்துப்பேட்டை ஜாம்பவானோடையிலிருந்து கள்ளத்தோணிகள் மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்ததும், விசாகப்பட்டினத்திலிருந்து ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு வாங்கப்படும் இந்த கஞ்சா பொட்டலங்கள் இலங்கை நபர்களிடம் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதும், இலங்கையில் கிலோ ரூ.50 ஆயிரத்திற்கும் விற்கப்படுவதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 14 பேரை கைது செய்தனர். கஞ்சா பொட்டலங்கள், லாரி, 3 கார், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதலான கஞ்சா பொட்டலங்களின் மொத்த மதிப்பு ரூ. 1.25 கோடி என கூறப்படுகிறது. கஞ்சா பதுக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 6 பேர் கைது புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் அப்துல் மஜீத் (33). புதுக்கோட்டை நகராட்சி 23வது வார்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர். இவர் விற்பனைக்காக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக எஸ்பி நிஷாபார்த்திபனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டில் பதுக்கி இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் இருந்து வாங்கியதாக அப்துல் மஜீத் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அப்துல் மஜீத் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த முரளி(36) என்பவரையும் விசாரணைக்காக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் சோதனையிட்ட போது வியாபாரிகள் சர்மா, நரேந்திகுமார், கதிர்வேல், மியாஸ்கனி ஆகியோரது வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரையும் கைது செய்தனர். …

Related posts

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்