ஆத்தூர் நெல்லூரில் பாதையை மீட்டு தர கோரி அரசு ஆவணங்களை ஒப்படைக்க வந்த மக்கள்: திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

 

திண்டுக்கல், ஆக. 22: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஆத்தூர் தாலுகா, சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட நெல்லூர் பகுதி மக்கள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் அரசு வழங்கிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கலெக்டர் பூங்கொடியிடம் வழங்க முற்பட்டனர். அப்போது கலெக்டர், அவர்களிடம் கோரிக்கை மனுவை வாங்கி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் நெல்லூர் பகுதி மக்கள் தெரிவித்ததாவது, ‘சித்தரேவு ஊராட்சி நெல்லூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் வாங்கி குடியிருந்து வருகிறோம்.
அந்த இடத்தின் உரிமையாளர் தற்போது பாதை என்னுடையது எனக்கூறி நாங்கள் செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி முட்களை வெட்டி போட்டு அடைத்து வைத்துள்ளார். இதனால் நாங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் தவிக்கிறோம். ஆதலால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு வழங்கிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தோம். எனவே கலெக்டர் பாதையை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related posts

அமையபுரம் ஊராட்சியில் குவாரி உரிமத்தை ரத்து செய்யுங்கள்

டூவீலர் திருட்டு

16 வயதிற்குட்பட்ட தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 4 மாநில வீரர்கள் பங்கேற்பு