ஆத்தூர் நகரமன்ற கூட்டம்

ஆத்தூர், செப்.1: ஆத்தூர் நகரமன்ற அவசர கூட்டம், தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் சுபாஷினி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 20 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. முன்னதாக திமுக உறுப்பினர் தங்கவேல் பேசுகையில், தமிழக முதல்வரின் சாதனை திட்டமான பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அவமதித்து செய்தி வெளியிட்ட நாளிதழை வன்மையாக கண்டிக்கிறோம். சிறப்பான ஆட்சி நடத்தி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்தி கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் குறித்து, தவறான பிரசாரங்களையும், அவதூறு செய்திகளை கூறும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர் உமாசங்கரி, நகரமன்ற கூட்டத்தில் பொதுக்கூட்டம் போல கூடாது என கூறி வெளிநடப்பு செய்கிறோம் என கூறினார். இதையடுத்து 4 அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.
பின்னர், காங்கிரஸ் உறுப்பினர் தேவேந்திரன் நமது நகராட்சிக்கு புதிதாக பணி மாறுதல் பொறுப்பேற்று இருக்கும், ஆணையாளர், பொறியாளர் உதவி பொறியாளர், கட்டிட ஆய்வாளர் உள்ளிட்டவர்களை வரவேற்பதோடு, மக்களின் தேவைகளை அடிப்படை வசதிகளை எந்த குறைபாடும் இன்றி செயல்படுத்த, நகர மன்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது, திமுக உறுப்பினர் ஜீவா நகரமன்ற தலைவர் மற்றும் ஆணையாளரிடம் மனு கொடுத்து விட்டு, கூட்ட அரங்கை விட்டு வேகமாக வெளியேறினர். திமுக விசிக உறுப்பினர்கள் நகராட்சி அண்ணா கலையரங்கத்தை புதுப்பித்து தர தனது சொந்த நிதியை வழங்கிய, ராசி விதைகள் நிறுவன தலைவர் ராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை