ஆத்தூரில் ₹4.78 கோடிக்கு மஞ்சள் ஏலம்

ஆத்தூர், மே 4: சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தில் வாரந்தோறும் மஞ்சள் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி, இந்த வாரம் 4640 மூட்டை மஞ்சள்(2698 குவிண்டால்) ஏலத்திற்கு வந்தது. விரலி ரகம் குவிண்டால் ₹16989 முதல் ₹21,233 வரையிலும், உருண்டை ரகம் ₹15669 முதல் ₹18,699 வரையிலும், பனங்காளி ₹22589 முதல் ₹28,619 வரையிலும் விற்பனையானது. ஆக மொத்தம் ₹4 கோடியே 78 லட்சத்திற்கு ஏலம் போனது. அதே வேளையில் கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ₹500 வரையிலும் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை