ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.காஞ்சிபுரம் ஜவகர்லால் வீதியில் ஆதி காமாட்சி ஆதி பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக உள்ள ஆதி காமாட்சி ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதையடுத்து சாரதா நவராத்திரி கொலு மண்டபத்தில் உற்சவர் காளிகாம்பாள், லட்சுமி, சரஸ்வதியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோயில் அர்ச்சகர் சதீஷ்குருக்கள் தீபாரதனை தொடங்கிய உடன் பெண்கள் தீபமேற்றி விளக்கு பூஜையை தொடங்கினர். அர்ச்சகர்கள் லலிதா சகஹஸ்வர நாமங்கள் மற்றும் வேத மந்திரங்கள் கூறும்போது குங்குமம் கொண்டு விளக்கு பூஜை மேற்கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தர், நிர்வாகிகள் ஏழுமலை ஆச்சாரி, எம்.ஆர்.பி.சதீஷ், துரைராஜ், சந்திரன், கோயில் அலுவலர் லலிதா ஆகியோர் செய்தனர்….

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

கோயம்பேடு மார்க்கெட்டில் கழுவி சுத்தப்படுத்தி விற்பனை செய்த அழுகிப்போன காய்கறிகள் பறிமுதல்