ஆதிரெங்கம் ஊராட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டி, அக். 8: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்ட சமூக நீதி, மனித உரிமை பிரிவு மற்றும் ஆதிரெங்கம் ஊராட்சி மன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிரெங்கம் ஊராட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் தலைமை வகித்தார். இதில் சமூக நீதி , சமூக முன்னேற்றம், தனி மனித வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, சைபர் கிரைம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் புள்ளியல் ஆய்வாளர் சரவண பாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன், காவலர் பிரபாகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், பொற்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை